கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதித்த 76 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் - மருத்துவமனை முதல்வர் நிர்மலா

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரியைச் சேர்ந்த கொரோனா பாதித்த 76 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை: கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரியைச் சேர்ந்த கொரோனா பாதித்த 76 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மருத்துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றும் நூறு தூய்மை பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருட்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வழங்கினார்.

இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆட்சியர் ராசாமணி, கோவை மாவட்டத்தில் 141 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொரோனா பாதித்த 116 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் கோவை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் உள்ள 16 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

சமூக பரவலை தடுக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது எனவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவும், அத்தியாவசிய காரணங்களுக்காக வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், அநாவசியமாக வருபவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கோவை மாவட்டத்தில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். 

இதையடுத்து செய்தியாளர்களுக்கு சந்தித்து பேசிய கோவை இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வர் நிர்மலா, கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கோவை, திருப்பூர், நீலகிரியைச் சேர்ந்த கொரோனா பாதித்த 76 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும், கோவையில் 116 பேரும், திருப்பூரில் 59 பேர், நீலகிரியில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும் கொரோனா குணமடைந்த பலர் பிளாஸ்மா சிகிச்சையளிக்க தங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என விருப்பம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார். 

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...