கோவை: கொரோனா வைரஸ் பரவலால் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தவித்து வந்த 113 பேர் கோவை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இலங்கை சென்றனர்.

கொரோனா பரவல் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 113 பேர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர்.
இந்த நிலையில், அவர்களை அழைத்துச் செல்ல தனி விமானம் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் கோவை விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்த 113 பேர் பேருந்து மூலம் கோவை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர்.
இதையடுத்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 113 பேரும் இலங்கை தலைநகர் கொழும்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.