கோவை: திருமணத்தை முகநூல் மூலம் பதிவிட்ட திருமண தம்பதியினர் உணவுகளை காவல்துறையினர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உணவுகளை வழங்கினர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மக்கள் கடந்த ஒரு மாதமாகவே அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வெளியே வருகின்றனர். மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முக்கியத் துறைகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
மேலும், அரசு அறிவித்துள்ளபடி திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பிரமாண்டமாக முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பல திருமணங்கள் தமிழகத்தில் மிகவும் எளிமையான முறையில் நடந்து வருகின்றன.
கோவை துடியலூர் அடுத்துள்ள குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த விக்னேஷ் பாபு மற்றும் பிரவினா ஆகியோர் இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற இருந்தது. வெகு குறைந்த அளவிலேயே உறவினர்களுடன் நடைபெற்ற இந்த திருமணத்தை பேஸ்புக்கில் லைவ் செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு ஷேர் செய்து உள்ளனர்.
இதனை தொடர்ந்து, திருமணதிற்கு தயார் செய்யப்பட்ட உணவுகளை காவல்துறையினர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு குருடம்பாளையம் முன்னாள் தலைவர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் வழங்கினர்.
உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 2500 மக்களை அழைத்து திருமணம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் திருமணத்தை ஊரடங்கு உத்தரவுக்கு ஏற்றாற்போல பல்வேறு மாற்றங்களுடன் எளிமையாக நடைபெற்றது.
உறவினர்கள், நண்பர்கள் என 25 பேர் கலந்து கொண்ட நிலையில் திருமணத்தை பேஸ்புக்கில் லைவ் செய்து மற்ற அனைவருக்கும் ஷேர் செய்து யூடியூப்பில் அப்லோடு செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், திருமணத்திற்கு செய்யப்பட்டு இருந்த காலை உணவை கோவை வடமதுரை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினருக்கு மணக்கோலத்திலேயே சென்று வழங்கியும் உள்ளனர்.
இதுகுறித்து விக்னேஷ் பாபு கூறுகையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் குறைந்த எண்ணிக்கையிலான மக்களை வைத்துத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை தொடர்ந்து எளிய முறையில் திருமணம் நடைபெற்றதாகவும்
உறவினர்கள் பலரும் கலந்துகொள்ள முடியாததால் திருமணத்தை ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் மூலம் பதிவேற்றம் செய்து உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், திருமணதிற்கு தயார் செய்த உணவுகளை வழங்கியதன் மூலம் அதிகப்படியான மக்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைத்ததுள்ளது. அதில் எங்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி என்றார்.