வால்பாறையில் பெய்த மழையால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு; தொழிலாளர்கள் மகிழ்ச்சி

கோவை: வால்பாறையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 



கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர, தற்காலிக மற்றும் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவின் காரணமாக தேயிலை தோட்டப்பணிகள் முடக்கப்பட்டிருந்தது. மத்திய அரசால் கடந்த 1ம் தேதி முதல் தேயிலை தோட்டப் பணிகள் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. நீண்ட நாட்களாக மழை இல்லாத காரணத்தால் செடிகளில் தேயிலை கொழுந்து உற்பத்தி வெகுவாக குறைந்திருந்தது.

இந்நிலையில், வால்பாறையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் வால்பாறையில் 19 மி.மீட்டர் மழையும், சோலையார் அணை பகுதியில் 12 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது. இதன் காரணமாக தேயிலை செடிகளில் கொழுந்து அதிகரித்து வருகிறது. 

தேயிலை செடிகளில் இலை அதிகரித்துள்ளதால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. தேயிலை உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 



இதனால் தேயிலை தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...