முழு ஊரடங்கு அறிவிப்பு எதிரொலி: கோவையில் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க குவியும் பொதுமக்கள்..!

கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் நான்கு நாட்களுக்கு கோவையில் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், காய்கறி மளிகை பொருட்களை வாங்க கடை வீதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.


கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் நான்கு நாட்களுக்கு கோவையில் முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், காய்கறி மளிகை பொருட்களை வாங்க கடை வீதிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் ஹாட் ஸ்பார்ட் ஆக உள்ள சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகரத்திலும் நாளை முதல் வரும் ஏப்.29 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

முழு ஊரடங்கின் போது மருந்தகம் தவிர ஏனைய கடைகள் அனைத்தும் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கோவை உக்கடம், காந்திபுரம், ரங்கேகவுண்டன் வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள காய்கறி மார்க்கெட், மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்காமல் பொருட்கள் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் சமூக இடைவெளிகளை மீறி மக்கள் குவிந்து வருவதால், போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். 

நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கும் அமலில் இருந்தாலும் நடமாடும் காய்கறி வண்டிகள் செயல்பாட்டில் இருக்கும் என மக்கள் அச்சம் கொள்ளாமல் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என அதிகாரிகள் மக்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...