கோவை: கோவையில் சிம்ப்ளிசிட்டி இணையதள நிர்வாகியை காவல்துறை கைது செய்துள்ளது ஜனநாயக பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை நசுக்கும் செயல் என அறப்போர் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை: கோவையில் சிம்ப்ளிசிட்டி இணையதள நிர்வாகியை காவல்துறை கைது செய்துள்ளது ஜனநாயக பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை நசுக்கும் செயல் என அறப்போர் இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
சிம்பிளிசிட்டி இணையதள பத்திரிக்கை கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு சரியான தரமான உணவு வழங்கப்படாதது குறித்தும், ரேஷன் கடைகளில் ரூ.1000 வழங்கப்படுவதில் முறைகேடு குறித்தும் எழுதியதற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டதாக தெரிகிறது.
மேலும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து சிம்பிளிசிட்டி பத்திரிக்கையில் எழுதியதும் இந்த கைதின் பின்புலத்தில் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கை சாதாரண மக்களையும் பத்திரிக்கைகளையும் மிரட்டும் செயலாகும்.
கொரோனா தொற்று பரவல் நேரத்தில் அரசு செய்ய தவறும் பொறுப்புகளையும் முறைகேடுகளையும் சுட்டிக் காட்டுவதில் மக்களுக்கும் பத்திரிக்கைகளுக்கும் முக்கிய பங்கு உண்டு. அரசு அதை சரி செய்ய வேலை செய்ய வேண்டுமே தவிர இது போன்ற கைது ஜனநாயக பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை நசுக்கும் செயலாகும்.
ஆகவே, உடனடியாக சிம்ப்ளிசிட்டி இணையதள நிர்வாகி கைது ஆண்ட்ரு சாம் ராஜா பாண்டியன் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என அறப்போர் இயக்கம் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.