திருப்பூரில் கரும் புகையை வெளியிடும் கார்பன் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் - ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

திருப்பூர்: திருப்பூரில் கரும் புகையை வெளியிடும் கார்பன் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் கரும் புகையை வெளியிடும் கார்பன் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே வட்டமலை கிராமத்துக்கு உட்பட்ட அவிநாசி பாளையம் புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கார்பன் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. 



இந்த தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கரும்புகை காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு விவசாயிகளுக்கும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுவதாக கடந்த ஒரு வருடமாக வருவாய் துறையினரிடம் தெரிவித்து வருவதாக கூறினர். 



மேலும், தற்போது ஊரடங்கு காலத்திலும் ஆலையை மூடாமல் தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் கொண்டு இயங்கி வருவதால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் அச்சம் ஏற்படும் சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நிரந்தர முடிவு எடுக்க வேண்டும் என கோரி அப்பகுதி விவசாயிகள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...