நீலகிரி: குன்னூர் அருகே பிக்கோல் கிராமத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
நீலகிரி: குன்னூர் அருகே பிக்கோல் கிராமத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் தற்போது கடுமையான வெயில் காரணமாக வறட்சி நிலவி வரும் வருகிறது, மேலும் கொராேனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கிராமப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து உணவு தண்ணீர் தேடி கிராமப் பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில், குன்னூர் அருகில் உள்ள பிக்கோல் கிராமத்திற்கு கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் கரடி ஒன்று உணவு தேடி கிராமத்திற்குள் வலம் வந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. அங்கு விவசாய நிலத்தில் கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை சேதப்படுத்தி வந்தது.
இது குறித்து அப்பகுதி மக்கள் குந்தா வன சரகத்திற்கு உட்பட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து கரடி நடமாட்டம் உள்ள பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.

பின்னர் கூண்டில் சிக்கிய கரடியை உடனடியாக கரடியை அப்பர் பவானி வனப்பகுதிக்கு வனத்துறையினர் கொண்டு சென்று விட்டனர்.