ஊரடங்கு உத்தரவால் வருமானம் இன்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்க தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் கோரிக்கை

கோவை: கோவையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குமாறு தமிழக வாடகை பொருட்கள் உரிமையாளர் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை: கோவையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குமாறு தமிழக வாடகை பொருட்கள் உரிமையாளர் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சருக்கு அவர்கள் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள ஒலி, ஒளி, ஜென்செட், பந்தல்‌, சாமியானா, பர்னிச்சர், சமையல்‌ பாத்திரங்கள்‌, ஸ்டேஜ்‌ டெக்கரேசன்‌, மணவறை அமைப்பாளர்கள்‌ கூட்டமைப்பான தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் மாநிலம்‌ முழுவதும்‌ சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இத்தொழில்‌ மூலம்‌ மாநாடு, அரசியல்‌ பொதுக்கூட்டங்கள்‌, அரசு விழாக்கள்‌, திருவிழா, திருமணம்‌, பள்ளி, கல்லூரி விழாக்கள்‌, மக்கள்‌ கூடும்‌ அனைத்து விழாக்களுக்கும்‌ மற்றும்‌ சுப நிகழ்ச்சிகளுக்கும்‌ ஏற்பாடுகள்‌ செய்யப்பட்ட நிலையில், இத்தொழில்‌ மத்திய/மாநில அரசுகள்‌ இப்போது அறிவித்துள்ள ஊரடங்கு சட்டம்‌ மூலம்‌ எங்களுடைய தொழில்‌ மிகவும்‌ பாதிப்படைந்துள்ளது. 

இத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு தமிழகம்‌ முழுவதும்‌ ஒரு லட்சத்திற்கும்‌ மேலான சிறிய மற்றும்‌ பெரிய நிறுவனங்களாக செயல்பட்ட நிலையில்‌ இத்தொழிலை நம்பி பல லட்சம்‌ குடும்பங்கள்‌ மற்றும்‌ சுமார்‌ பத்து லட்சத்திற்கும்‌ மேற்பட்ட தொழிலாளர்கள்‌ உள்ளனர்‌.

ஆகவே, இதனை கருத்தில் கொண்டு எங்கள்‌ தொழில்‌ நிறுவனங்களுக்கு நிதியுதவியும்‌, வரிச்சலுகை, கடன்‌ தள்ளுபடி போன்ற நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்‌ சலுகைகளை தங்களது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமன தமிழக முதலமைச்சருக்கு தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...