கோவை: கோவையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குமாறு தமிழக வாடகை பொருட்கள் உரிமையாளர் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கோவை: கோவையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானம் இல்லாமல் தவித்து வரும் தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்குமாறு தமிழக வாடகை பொருட்கள் உரிமையாளர் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக முதலமைச்சருக்கு அவர்கள் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் உள்ள ஒலி, ஒளி, ஜென்செட், பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், ஸ்டேஜ் டெக்கரேசன், மணவறை அமைப்பாளர்கள் கூட்டமைப்பான தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இத்தொழில் மூலம் மாநாடு, அரசியல் பொதுக்கூட்டங்கள், அரசு விழாக்கள், திருவிழா, திருமணம், பள்ளி, கல்லூரி விழாக்கள், மக்கள் கூடும் அனைத்து விழாக்களுக்கும் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இத்தொழில் மத்திய/மாநில அரசுகள் இப்போது அறிவித்துள்ள ஊரடங்கு சட்டம் மூலம் எங்களுடைய தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளது.
இத்தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேலான சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களாக செயல்பட்ட நிலையில் இத்தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் மற்றும் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
ஆகவே, இதனை கருத்தில் கொண்டு எங்கள் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவியும், வரிச்சலுகை, கடன் தள்ளுபடி போன்ற நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை தங்களது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டுமன தமிழக முதலமைச்சருக்கு தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.