கொரோனா எதிரொலி: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு ரேபிட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை

கோவை: கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

கோவை: கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கு ரேபிட் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. 

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மும்பையில் ஊடகத்துறையில் பணியாற்றிய 54 பேருக்கு நோய் தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இதேபோல் சென்னையில் ஊடகத்துறையில் பணியாற்றிய 4 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பில் இருந்த 30 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்று உள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம், கோவை மாவட்ட சுகாதார துறை, மக்கள் தொடர்பு துறை இணைந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு ரத்த மாதிரி சோதனை எடுக்கப்பட்டு ரேபிட் டெஸ்டிங் கிட் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.



சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சுகாதார துறை இணை இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையில் மருத்துவர் ஜோ டேனியல் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். 



மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, வருவாய் அலுவலர் இராமதுரைமமுருகன் உள்ளிட்டோர் பரிசோதனை செய்யப்படுவதை ஆய்வு மேற்கொண்டனர். 

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...