கோவையில் இஸ்லாமியர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டதாக அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாவட்ட தலைவர் மீது வழக்கு!

கோவை: கோவையில் இஸ்லாமியர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டதாக அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாவட்ட தலைவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை: கோவையில் இஸ்லாமியர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டதாக அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாவட்ட தலைவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை சுங்கம் கருணாநிதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் லோட்டஸ் மணிகண்டன். இவர் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் கோவை மாவட்ட தலைவராக உள்ளார். 

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலச் செயலாளர் அயூப் என்பவர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, லோட்டஸ் மணிகண்டன் மீது இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணையில் கசிவு: நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர்க் கசிவை சரிசெய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணைய...

அன்னூர் அருகே பெரியார்-அம்பேத்கர் சிலைகள், படிப்பகம் திறப்பு: எம்.பி. ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் பங்கேற்பு

கோவை மாவட்டம் அன்னூர் அருகே நல்லிசெட்டிபாளையத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அமைத்த பெரியார், அம்பேத்கர் சிலைகள் மற...

சிறுவாணி அணை நீர் கசிவு சரிசெய்ய ₹18 கோடி மதிப்பீடு: மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா நேரில் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டாரவி தேஜா, கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரிசெய்ய நேரில் ஆய...

கோவை மாநகர் AIADMK மாணவர் அணி, வழக்கறிஞர் பிரிவுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

கோவை மாநகர் மாவட்ட AIADMK சார்பு அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர் அணி மற்றும் வழக்கறிஞர் பிரிவ...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...