கோவை: வால்பாறை நகராட்சி மூலம் கூட்ட நெரிசலை குறைக்க பல்வேறு பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து வாகன போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 50க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இந்த தேயிலை தோட்டங்களில் 50 ஆயிரத்துக்கு மேலான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களது தேவைக்காக அடிக்கடி வால்பாறை நகருக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கூட்டம் கூட்டமாக வருவதால் வால்பாறையில் சமூக விலக்கு கேள்விக்குறியாகிறது. குறிப்பாக மளிகை கடை, காய்கறி கடை, இறைச்சிக் கடைகளில் மக்கள் அதிகம் கூடுகின்றனர்.

இதனை கட்டுப்படுத்த வால்பாறை நகராட்சி ஆணையர் டாக்டர் பவுன்ராஜ் உத்தரவின் பேரில், வால்பாறை நடுமலை பாலம், காமராஜ் நகர், பிஏபி கேட், புதிய பேருந்து நிலையம் அருகில் நல்ல காத்து சாலை மற்றும் சோலையார் அணை சாலையில் கரும் பாலம் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்களின் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக வால்பாறை நகருக்கு வருபவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு உள்ளவரை இந்த சோதனைச் சாவடிகள் இயங்கும் என வால்பாறை ஆணையர் தெரிவித்தார்.