கோவையில் முறையான உணவு வழங்க வேண்டி பயிற்சி மருத்துவர்கள் புகார்..! அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் முறையான உணவு வழங்கப்பட்டது

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு தேவையான தரமான உணவுகள் கிடைக்கவில்லை என்று எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நேற்று மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளை செய்து கொடுத்தனர்.

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு தேவையான தரமான உணவுகள் கிடைக்கவில்லை என்று எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நேற்று மருத்துவமனை நிர்வாகத்தினர் அவர்களுக்கு தேவையான உணவு வசதிகளை செய்து கொடுத்தனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். 

இப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் இணைந்து குழுவாக உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்களுக்கு ஒரு சில இடங்களில் போதுமான வசதிகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் முறையான உணவுகள் கிடைப்பதில்லை என புகார்கள் எழுந்தது.

இதைத்தொடர்ந்து, இந்த புகார்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதனால் மாணவர்களிடம் தங்களின் குறைகளை கேட்டறிந்த அதிகாரிகள் அவர்களுக்கு தேவையான உணவு வசதிகள் மற்றும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...