கோவையில் வரும்‌ 21ம்‌ தேதி பிரபல இசை கலைஞர்களின்‌ நிகழ்ச்சிகளுடன்‌ களைக்கட்ட தயாராகும்‌ ஈஷா மஹாசிவராத்திரி!

கோவை: இந்தியா மற்றும்‌ லெபனான்‌ நாட்டைச்‌ சேர்ந்த பிரபல இசை கலைஞர்களின்‌ நிகழ்ச்சிகளுடன்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழா விடிய விடிய களைக்கட்ட தயாராக உள்ளது.

கோவை: இந்தியா மற்றும்‌ லெபனான்‌ நாட்டைச்‌ சேர்ந்த பிரபல இசை கலைஞர்களின்‌ நிகழ்ச்சிகளுடன்‌ ஈஷா மஹாசிவராத்திரி விழா விடிய விடிய களைக்கட்ட தயாராக உள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தின்‌ 26-வது ஆண்டு மஹாசிவராத்திரி விழா வரும்‌ 21-ம்‌ தேதி மாலை 6 மணி முதல்‌ மறுநாள்‌ காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு நடக்க உள்ளது. சத்குரு முன்னிலையில்‌ நடக்கும்‌ இவ்விழாவில்‌ தமிழகம்‌ மட்டுமின்றி உலகம்‌ முழுவதும்‌ இருந்து லட்சக்கணக்கான மக்கள்‌ நேரில்‌ பங்கேற்க உள்ளனர்‌.

இவ்விழாவில்‌ தமிழகத்தைச்‌ சேர்ந்த பிரபல நாட்டுப் புற இசை கலைஞரும்‌ சூது கவ்வும்‌, ஜிகர்தண்டா, வருத்தப்படாத வாலிபர்‌ சங்கம்‌, பேட்ட உள்ளிட்ட படங்களில்‌ பாடல்களை பாடியுள்ள அந்தோணி தாசன்‌, தமிழ்‌, தெலுங்கு, மலையாளம்‌, கன்னடம்‌ உள்ளிட்ட மொழிகளில்‌ ஏராளமான பாடல்கள்‌ பாடியுள்ள பிரபல பின்னணி பாடகர்‌ கார்த்திக்‌ ஆகியோர்‌ பங்கேற்று தமிழ்‌ பாடல்களை பாட உள்ளனர்‌. மேலும்‌, குஜராத்தைச்‌ சேர்ந்த பிரபல பின்னணி பாடகர்‌ இரு.பார்த்தீவ்‌ கோஹில்‌ மற்றும்‌ இரு.ஆதித்யா கத்வியும்‌ தங்கள்‌ இசையால்‌ மக்களை கவர உள்ளனர்‌.

இதுதவிர, புகழ்பெற்ற இந்திய கவிஞரான கபீரின்‌ பெயரில்‌ இசை குழுவை உருவாக்கி நாட்டுப்புறப் பாடல்களை பாம்‌ வரும்‌ ' கபீர்‌ கஃபே' குழுவினரும்‌, லெபனானைச்‌ சேர்ந்த டிரம்ஸ்‌ கலைஞர்களும்‌ மக்களை உற்சாக வெள்ளத்தில்‌ ஆழ்த்த உள்ளனர்‌. தியான லிங்கத்தில்‌ நிகழ்த்தப்படும்‌ பஞ்சபூத ஆராதனாவுடன்‌ தொடங்கும்‌ விழா லிங்க பைரவி தேவியின்‌ மஹா யாத்திரை, சக்திவாய்ந்த தியானங்கள்‌, சத்குருவின்‌ சத்சங்கம்‌, கண்ணை கவரும்‌ ஆதியோகி இவய தரிசன காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன்‌ விடிய விடிய களைக்கட்ட உள்ளது.

மஹாசிவராத்திரி விழாவுக்கு வரும்‌ பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள்‌ மற்றும்‌ சர்ப்ப சூத்திரம்‌ பிரசாதமாக வழங்கப்படும்‌. விழாவில்‌ பங்கேற்கும்‌ லட்சக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானமும்‌ வழங்கப்பட உள்ளது. மஹாசிவராத்திரி விழாவில்‌ கலந்துகொள்வதற்காக தமிழகம்‌ முழுவதும்‌ அந்தந்த மாவட்டங்களில்‌ தன்னார்வ தொண்டர்கள்‌ மூலம்‌ பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல்‌, விழா நாட்களில்‌ கோவையில்‌ இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அனுமதி இலவசம்‌. அனைவரும்‌ வருக.

கூடுதல்‌ தகவல்களுக்கு:tamil.sadhguru.org/MSR, 83000 83111

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...