பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் கேப்டன் தொலைக்காட்சி நிருபர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி பகுதியின் கேப்டன் தொலைக்காட்சி நிருபர் கிணத்துக்கடவு அருகே நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரும், அவருடன் வந்த நண்பரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை: கோவை மாவட்டத்திற்குட்பட்ட பொள்ளாச்சி பகுதியின் கேப்டன் தொலைக்காட்சி நிருபர் கிணத்துக்கடவு அருகே நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் அவரும், அவருடன் வந்த நண்பரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பொள்ளாச்சி போடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பொள்ளாச்சி பகுதியின் கேப்டன் தொலைக்காட்சி நிருபராகவும், தேமுதிகவின் மேற்கு ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று சொந்த பணி நிமித்தம் காரணமாக கோவை வந்து, பின்னர் இன்று அதிகாலை சுமார் ஒரு மணியளவில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கிணத்துக்கடவு அருகே இவருடன் காரில் பயணித்த இருவர் தண்ணீர் வாங்குவதற்காக வெளியே இறங்கியுள்ளனர். இதையடுத்து, காரில் இருந்த சந்திரசேகர், கிஷோர் மற்றும் செந்தில் ஆகிய மூன்று பேர் திடீரென காரை வளைத்துக்கொண்டு கோவை சாலை நோக்கி சென்றனர். அப்போது, எதிர்பாராத விதமாக கார் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் சந்திரசேகர் மற்றும் கிஷோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் மற்றொரு நபரான செந்தில் என்பவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து மேற்கு மண்டலத்தில் இரண்டு இளம் பத்திரிகையாளர்கள் சாலை விபத்தில் பலியாகிய சம்பவம் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...