கோத்தகிரியில் புலிக்கு சுருக்கு வைத்த தோட்ட உரிமையாளர் மீது வழக்கு; தப்பியோடிய புலியை ட்ரோன் மூலம் தேடும் பணி தீவிரம்

நீலகிரி: கோத்தகிரி அருகே புலிக்கு சுருக்கு வைத்த தோட்ட உரிமையாளர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய புலியினை ட்ரோன் கேமரா மூலம் தேடி வருகின்றனர்.

நீலகிரி: கோத்தகிரி அருகே புலிக்கு சுருக்கு வைத்த தோட்ட உரிமையாளர் மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தப்பியோடிய புலியினை ட்ரோன் கேமரா மூலம் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள உயிலட்டி பகுதியில் பல்வேறு காய்கறி தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த தோட்டத்துக்கு அடிக்கடி வரும் கரடி உள்ளிட்ட வனவிலங்குகளை கட்டுப்படுத்துவதற்காக ஆங்காங்கே விவசாயிகள் சுருக்கு கம்பிகள் வைப்பது வழக்கம். இந்நிலையில் இவ்வழியாக வந்த புலி ஒன்றின் வலது கால் சுருக்கு கம்பியில் மாட்டிக் கொண்டது. இதையடுத்து, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி புலியை மீட்க முயற்சி செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, புலி தனது வலது காலை கம்பியில் இருந்து விலக்கிக்கொண்டு தப்பி ஓடியது. வனத்துறையினர் புலிக்கு ஏதாவது காயம் ஏற்பட்டு இருக்குமா என்று புலியை வனப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தனர். 



புலி அகப்படாததை அடுத்து, மூன்று இடங்களில் கேமராவை வைத்து அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர் அதிலும் புலி சிக்காததால் வனத்துறையினர் அங்கு ட்ரோன் கேமரா மூலம் இன்று மாலை புலியினை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்

இதுகுறித்து வனத்துறை அதிகாரி குருசாமி தபலா கூறும்போது, 'அந்த பகுதியில் இரண்டு புலிகளை பார்த்ததாக பொதுமக்கள் கூறினர். இதனால் அந்த பகுதியில் புலியின் நடமாட்டம் எப்படி உள்ளது, அதற்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா வனப்பகுதியில் ஏதாவது புலிகளுக்கு இடையூறு உள்ளதா என்பது குறித்து ஆராய ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கிறோம். மேலும் புலிக்கு சுருக்கு வைத்த தோட்ட உரிமையாளர் நஞ்சுண்டன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...