திருப்பூரில் 47வது ஆயத்த ஆடை கண்காட்சி; கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் தொடங்கி வைத்தார்

திருப்பூர்: தமிழகத்தில் பின்னலாடைத் துறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள தொழிற்கொள்கை மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக திருப்பூரில் 47வது ஆயத்த ஆடை கண்காட்சியை திறந்து வைத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன் தெரிவித்தார்.


திருப்பூர்: தமிழகத்தில் பின்னலாடைத் துறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ள தொழிற்கொள்கை மூலம் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாக திருப்பூரில் 47வது ஆயத்த ஆடை கண்காட்சியை திறந்து வைத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன் தெரிவித்தார்.

திருப்பூரில் 47வது ஆயத்த ஆடைகள் கண்காட்சி பழங்கரை பகுதியில் உள்ள ஐகேஎப் கண்காட்சி வளாகத்தில் இன்று துவங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன் ஆயத்த ஆடை ஏற்றுமதி கழக தலைவர் சக்திவேல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.



நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குனர் கருணாகரன், தமிழக அரசு பின்னலாடை துறையினை மேம்படுத்த புதிய தொழிற்கொள்கையின் மூலம் பல்வேறு சலுகைகளை அளித்து வருவதாகவும், பின்னலாடை துறையினருக்கு ஊக்க நிதி அளிக்க விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாகவும் அதேபோல், கடன் பெரும் நிறுவனங்களுக்கான 4 சதவீத மானியத்தை 6 சதவீதமாக உயர்த்தி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சிறிய மற்றும் பெரிய அளவிலான தொழில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...