கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் 20க்கும் மேற்பட்ட தேயிலை தோட்டங்களில் உள்ள சி.எஸ்.ஜ சர்ச்களில் ஞாயிறு பள்ளி இயங்கி வருகிறது. இவர்கள் அனைவரும் ஒன்றினைந்து வால்பாறையிலுள்ள சி.எஸ்,ஜ சர்ச் வளாகத்தில் ஒன்று குழுமினர். தொடர்ந்து, மனித நேயத்தை வலியுறுத்தி பேரணி நடத்தினர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் மனித நேயத்தை காப்போம், உழவு இல்லையேல் உணவு இல்லை, சாலை விதிகளை மதிப்போம் போன்ற பதாகைகளை கையில் ஏந்தியபடி கோசன்னா பாடல்களை பாடியபடி வந்தனர்.

மறை மாவட்ட தலைவர் ஜெபராஜ் தலைமையில் சி.எஸ்,ஜ சர்ச் வளாகத்தில் புறப்பட்ட பேரணி பழைய பேருந்து நிலையம், தபால் நிலையம், காந்தி சிலை வளாகம். ஸடான்மோர் சந்திப்பு புதிய பேருந்து நிலையம் வரை சென்று ஆலயத்திற்கு திரும்பியது.
தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பேரணியில் ஞாயிறு பள்ளி நிர்வாகி ஸ்டீபன் மற்றும் நிர்வாகிகள் ஆண்கள் பெண்கள் சிறார்கள் என 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.