கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப. தலைமையில் 24X7 குடிநீர் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் தெரிவித்ததாவது ;-
கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள், பொறியாளர்கள் குறித்த காலத்திற்குள் தரமானதாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும். குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணிகளையும், குடிநீர் இணைப்புகள் வழங்கும் பணிகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.
மேலும், குடிநீர் குழாய் மீட்டர் கணக்கெடுப்பு மற்றும் குடிநீர் கட்டணங்கள் பணிகளையும், குடிநீர் கட்டண செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பராமரிப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்தும், மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் சீராகவும், விரைவாகவும் குடிநீர் விநியோகித்திட வேண்டுனெவும், குடிநீர் குழாய் உடைந்தாலோ அல்லது தடை ஏற்பட்டாலோ அதனை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக சரிசெய்திட வேண்டும் எனவும், குடிநீர் மாசு ஏற்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷரவன்குமார் ஜடாவத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் அவர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், திட்ட மேலாண்மை ஆலோசகர் குழுவினர் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.