கோவையில் 24 மணிநேர குடிநீர்‌ திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களுடன்‌ மாநகராட்சி ஆணையர் ஆய்வுக்‌ கூட்டம்‌

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப. தலைமையில்‌ 24X7 குடிநீர்‌ திட்டப்பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்கள்‌.

கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ இ.ஆ.ப. தலைமையில்‌ 24X7 குடிநீர்‌ திட்டப்பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்து அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌ முன்னிலை வகித்தார்கள்‌.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ தெரிவித்ததாவது ;-

கோவை மாநகராட்சியில்‌ 24x7 குடிநீர்‌ திட்டப்பணிகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌, பொறியாளர்கள்‌ குறித்த காலத்திற்குள்‌ தரமானதாகவும்‌, விரைந்தும்‌ முடிக்க வேண்டும்‌. குடிநீர்‌ குழாய்கள்‌ பொருத்தும்‌ பணிகளையும்‌, குடிநீர்‌ இணைப்புகள்‌ வழங்கும்‌ பணிகளையும்‌ துரிதமாக மேற்கொள்ள வேண்டும்‌.

மேலும்‌, குடிநீர்‌ குழாய்‌ மீட்டர்‌ கணக்கெடுப்பு மற்றும்‌ குடிநீர்‌ கட்டணங்கள்‌ பணிகளையும்‌, குடிநீர்‌ கட்டண செயல்பாடுகள்‌ மற்றும்‌ அவற்றின்‌ பராமரிப்பு பணிகளின்‌ முன்னேற்றம்‌ குறித்தும்‌, மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளிலும்‌ சீராகவும்‌, விரைவாகவும்‌ குடிநீர்‌ விநியோகித்திட வேண்டுனெவும்‌, குடிநீர்‌ குழாய்‌ உடைந்தாலோ அல்லது தடை ஏற்பட்டாலோ அதனை சம்மந்தப்பட்ட அலுவலர்கள்‌ உடனடியாக சரிசெய்திட வேண்டும்‌ எனவும்‌, குடிநீர்‌ மாசு ஏற்படாமல்‌ பாதுகாக்கப்பட வேண்டும்‌ எனவும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ தெரிவித்தார்‌.

இக்கூட்டத்தில்‌, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌ அவர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌, திட்ட மேலாண்மை ஆலோசகர்‌ குழுவினர்‌ மற்றும்‌ பொறியாளர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...