கோவையில் இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் இளைஞரின் உயிரை காப்பாற்றிய தலைக்கவசம் - ஒருவர் பலி

கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அதேசமயம், பின்னால் அமர்ந்து வந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அதேசமயம், பின்னால் அமர்ந்து வந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள நகரப் பேருந்து நிலையத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் வந்து செல்வது வழக்கம்‌. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 9ம் தேதி கோவை கிராஸ்கட் சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட பேருந்து சக்கரத்தின் கீழ் இருசக்கர வாகனம் சிக்கி விபத்து ஏற்பட்டது.



பேருந்தை ஒட்டி அருகில் வந்த கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை கவனிக்காத பேருந்து ஓட்டுநர், பேருந்து நிலையத்துக்குள் திரும்ப முற்பட்ட போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனமானது பேருந்து சக்கரத்தின் கீழ் மாட்டி தரதரவென இழுத்துச் சென்றது.



பின்னர் உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் சகபயணிகள் இறங்கி விபத்துக்குள்ளான இருவரையும் மீட்டனர். இதில் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அதேசமயம், பின்னர் அமர்ந்து வந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விபத்து குறித்து காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...