கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில், தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அதேசமயம், பின்னால் அமர்ந்து வந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள நகரப் பேருந்து நிலையத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 9ம் தேதி கோவை கிராஸ்கட் சாலையிலிருந்து பேருந்து நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட பேருந்து சக்கரத்தின் கீழ் இருசக்கர வாகனம் சிக்கி விபத்து ஏற்பட்டது.

பேருந்தை ஒட்டி அருகில் வந்த கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை கவனிக்காத பேருந்து ஓட்டுநர், பேருந்து நிலையத்துக்குள் திரும்ப முற்பட்ட போது எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனமானது பேருந்து சக்கரத்தின் கீழ் மாட்டி தரதரவென இழுத்துச் சென்றது.

பின்னர் உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் சகபயணிகள் இறங்கி விபத்துக்குள்ளான இருவரையும் மீட்டனர். இதில் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அதேசமயம், பின்னர் அமர்ந்து வந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விபத்து குறித்து காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.