கோவை: மோசடி வழக்கில் கைதான அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கோவை: மோசடி வழக்கில் கைதான அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அதிமுக பெயரில் இணையப்பக்கம் நடத்தி அதில் அக்கட்சி சின்னத்தை பயன்படுத்தி, ஆள் சேர்ப்பு நடத்தியதாகவும், இது குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக பிரமுகர் கந்தவேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி கடந்த ஜனவரி 25 ம் தேதி சூலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது மோசடி, கொலை மிரட்டல் உட்பட 17 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு
கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
விசாரணையில் கே.சி.பழனிச்சாமி தரப்பு, புகார் அளித்த அதிமுக பிரமுகர் கந்தவேல் தரப்பு, அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.
இதனையடுத்து கே.சி.பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி சக்திவேல் உத்திரவிட்டார். சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கும், மாலை 5 மணிக்கும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும், சாட்சிகளை கலைக்கும் விதத்தில் செயல்படக் கூடாது என்ற நிபந்தனையும் விதித்து ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.