அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி, கே சி பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமின்

கோவை: மோசடி வழக்கில் கைதான அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.



கோவை: மோசடி வழக்கில் கைதான அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அதிமுக பெயரில் இணையப்பக்கம்  நடத்தி அதில் அக்கட்சி சின்னத்தை பயன்படுத்தி, ஆள் சேர்ப்பு நடத்தியதாகவும், இது குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக பிரமுகர் கந்தவேல் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும்  முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி கடந்த ஜனவரி 25 ம் தேதி சூலூர் போலீசாரால்  கைது செய்யப்பட்டார். அவர் மீது மோசடி, கொலை மிரட்டல் உட்பட 17 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யபட்டது. 

இந்த வழக்கில்  ஜாமீன் கேட்டு 

கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான  விசாரணை இன்று நடைபெற்றது.

விசாரணையில் கே.சி.பழனிச்சாமி தரப்பு, புகார் அளித்த அதிமுக பிரமுகர்  கந்தவேல்  தரப்பு, அரசுத்தரப்பு  வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். 

இதனையடுத்து கே.சி.பழனிச்சாமிக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி சக்திவேல் உத்திரவிட்டார். சூலூர் குற்றவியல்  நீதிமன்றத்தில் காலை 10.30  மணிக்கும், மாலை 5 மணிக்கும் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும், சாட்சிகளை கலைக்கும் விதத்தில் செயல்படக் கூடாது என்ற நிபந்தனையும் விதித்து ஜாமின் வழங்கி கோவை நீதிமன்றம்  உத்தரவிட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...