கோவை: கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனையில், நரம்பியல் துறை சிறப்பு மருத்துவமனை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14ம் தேதி வெள்ளிக்கிழமை பி.எஸ்.ஜி மருத்துவமனை கலையரங்கத்தில் வெள்ளிவிழா ஆண்டு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு இன்று காலை நடைபெற்றது.
இதில் பி.எஸ்.ஜி சிறப்பு மருத்துவமனை இயக்குனர் புவனேஸ்வரன், நரம்பியல் அறுவைச் சிகிச்சை துறை பேராசிரியர் ராஜ்குமார் ஆகியோர் கூறுகையில்:
பி.எஸ்.ஜி மருத்துவமனையின் நரம்பியல் அறுவைச் சிகிச்சைத் துறை, சிறப்பு மருத்துவமனை ஆகியவை 1994-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு வரும் பிப்ரவரி 14ம் தேதி பி.எஸ்.ஜி வெள்ளிவிழா கொண்டாட்டம் மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற உள்ளது.
இதில் பி.எஸ்.ஜி அறக்கட்டளை தலைவர் ஜி.ஆர் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பி.எஸ்.ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார்.
வெள்ளிவிழா ஆண்டையொட்டி, இந்த ஒரு வருடம் முழுவதும் சிறப்பு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளது. 8000 மூளை அறுவை சிகிச்சையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இருதய அறுவை சிகிச்சையும் இதுவரை மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு சலுகை கட்டணத்திலும், அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலமும் மருத்துவ சேவைகளை பி.எஸ்.ஜி மருத்துவமனை அளித்து வருகிறது. வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, பி.எஸ்.ஜி செயலியை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அவசர உதவி சிகிச்சை 7449 I08 108 எண் அறிமுகப்படுத்தப்பட்டும் என்றனர்.