கோவை: கோவையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று, பிப் 9 ஆம் தேதி மதியம் சுமார் 2 மணி அளவில் நீலச்சட்டை பேரணி நடைபெற உள்ளது.
கோவை: கோவையில் பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் இன்று, பிப் 9 ஆம் தேதி மதியம் சுமார் 2 மணி அளவில் நீலச்சட்டை பேரணி நடைபெற உள்ளது.
இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவுள்ளதாக பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த பேரணியானது அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் துவங்கி மகளிர் பாலிடெக்னிக்கில் நிறைவடைகிறது.
இதைத்தொடர்ந்து சாதி ஒழிப்பு மாநாடானது மாலை 5 மணி அளவில் பாலசுந்தரம் சாலையில் பறை இசையுடன் துவங்க உள்ளது.
இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் மணி, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, நடிகர் சத்யராஜ் ,இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் கோபி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.