நாளை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு , கோவையில் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்

கோவை மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாநகர மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.



கோவை: கோவை மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மாநகர மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தைப்பூச தேர் திருவிழாவானது கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை காலை 11:30 மணிக்கு மேல் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் குமரகுருபர சுவாமிகள், சாந்தலிங்க மருதாசல அடிகளார் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி, சேவூர் ராமச்சந்திரன்,  சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ,சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மாவட்ட ஆட்சியர்  காவல்துறை அதிகாரிகள் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வழிபட வர உள்ளதால், மருதமலையை சுற்றியுள்ள பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின்பேரில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

அதே போல், கோவை மாநகர் மற்றும் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் தேர் ஓட்டங்கள் நடைபெற உள்ளதால் மொத்தமாக 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

குறிப்பாக மருதமலையில் மலை மேல் செல்ல இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மலையடி வாரத்திலிருந்து கோவிலுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் எளிதாக வந்து செல்ல இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...