கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இதர அமைப்புகளின் சார்பில் பழங்குடியின சிறுவனை காலணியை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.
கோவை: கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இதர அமைப்புகளின் சார்பில் பழங்குடியின சிறுவனை காலணியை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கான சிறப்பு நல்வாழ்வு புத்துணர்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று துவங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சரை மாவட்ட ஆட்சியர், புலிகள் காப்பகக் கள இயக்குநர், வனத்துறை உயர் அதிகாரிகள் வரவேற்று முகாமில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இரண்டு பழங்குடியின சிறுவர்களை அழைத்து தனது காலணிகளைக் கழற்றிவிடச் செய்தார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அதேபோல, இதற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
இந்த நிலையில் இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய மாணவர் சங்கம், மற்றும் திராவிட தமிழர் கட்சி சார்பில் பழங்குடியின சிறுவனை காலணியை கழட்ட சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீதும், அவரின் நடவடிக்கையை தடுக்காமல் வேடிக்கை பார்த்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து புகார்தாரர்கள் கூறும்போது ;-
அரசியலமைப்பு சட்டத்தின் சரத்துக்கள் தீண்டாமை ஒரு குற்றம் என குறிப்பிடுகிற நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி ஏற்ற அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திண்டுக்கல் சீனிவாசன் அவர்களின் நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்தின் சரத்துக்களை எதிரானது. ஆகவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.