கோவை: கேரளாவில் இருந்து கோவைக்கு LSD எனும் போதைமருந்து தடவிய அட்டை வில்லைகள் மற்றும் MDMA எனும் போதை மாத்திரைகள் கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகர் பீளமேடு சுற்றியுள்ள கல்லூரிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாகவும் மேலும் போதைப்பொருளை வெளியூர்களில் இருந்து கடத்தி வருவதாகவும் கிடைத்த தகவலின்படி கோவை மாநகர் அவினாசி சாலையில் உள்ள கல்லூரி பகுதியில் கோவை போதைப்பொருள் தடுப்புப்பிரிவு துணை கண்காணிப்பாளர் வின்சென்ட் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த நபர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அவர்கள் கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெகதீஷ் மகன் தீபக் (23) மற்றும் கேரளா பாலக்காடு சித்தூரை சேர்ந்த பாபு ஜெயன் மகன் ஜித் (21) ஆகியோர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரிடமும் விசாரித்த போது, அவர்கள் இருவரும் கேரளாவிலிருந்து கோவைக்கு MDMA எனும் போதை மாத்திரைகள் மற்றும் LSD எனும் போதை மருந்து தடவிய அட்டை வில்லைகளை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி நபர்களிடம் இருந்து போதைப் பொருட்களை கைப்பற்றி இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் இரண்டு நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.