கேரளாவில் இருந்து கோவைக்கு போதைமருந்து கடத்தி வந்த இருவர் கைது; போலீசார் விசாரணை

கோவை: கேரளாவில் இருந்து கோவைக்கு LSD எனும்‌ போதைமருந்து தடவிய அட்டை வில்லைகள்‌ மற்றும்‌ MDMA எனும்‌ போதை மாத்திரைகள்‌ கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கேரளாவில் இருந்து கோவைக்கு LSD எனும்‌ போதைமருந்து தடவிய அட்டை வில்லைகள்‌ மற்றும்‌ MDMA எனும்‌ போதை மாத்திரைகள்‌ கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாநகர்‌ பீளமேடு சுற்றியுள்ள கல்லூரிகளுக்கு போதைப்பொருள்‌ விற்பனை செய்வதாகவும்‌ மேலும்‌ போதைப்பொருளை வெளியூர்களில்‌ இருந்து கடத்தி வருவதாகவும்‌ கிடைத்த தகவலின்படி கோவை மாநகர்‌ அவினாசி சாலையில்‌ உள்ள கல்லூரி பகுதியில்‌ கோவை போதைப்பொருள்‌ தடுப்புப்பிரிவு துணை கண்காணிப்பாளர்‌ வின்சென்ட்‌ அவர்கள்‌ தலைமையில்‌ காவல்‌ ஆய்வாளர் சரவணன்‌ மற்றும்‌ போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த நபர்களை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அவர்கள்‌ கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஜெகதீஷ்‌ மகன்‌ தீபக்‌ (23) மற்றும்‌ கேரளா பாலக்காடு சித்தூரை சேர்ந்த பாபு ஜெயன்‌ மகன்‌ ஜித்‌ (21) ஆகியோர்கள்‌ என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரிடமும்‌ விசாரித்த போது, அவர்கள்‌ இருவரும்‌ கேரளாவிலிருந்து கோவைக்கு MDMA எனும்‌ போதை மாத்திரைகள்‌ மற்றும்‌ LSD எனும்‌ போதை மருந்து தடவிய அட்டை வில்லைகளை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்படி நபர்களிடம்‌ இருந்து போதைப்‌ பொருட்களை கைப்பற்றி இருவரையும்‌ கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்‌ இந்த வழக்கில்‌ தொடர்புடைய மேலும் இரண்டு நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்‌.

Newsletter

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...