கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த காரமடை காவல் நிலையத்திற்குட்பட்ட பல பகுதியில் தமிழக அரசால் தடை செய்யபட்ட லாட்டரி மற்றும் கஞ்சா போன்றவை விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து காரமடை போலீசார் நகர மற்றும் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக கண்கானிப்பு பணியினை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று காரமடையின் (மேற்கு) உள்ள நரிக்குறவர் காலனி பகுதியில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வந்த தகவலை அடுத்து அங்கு சென்ற காரமடை போலீசார் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் விசாரனை நடத்தினர்.
அப்போது அந்த பெண்ணின் கையில் இருந்த பையை சோதனையிட்ட போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரனை நடத்தியதில், அவர் பூஜங்கனூரை சேர்ந்த பழனியம்மாள் என்பதும் இவர் அடிக்கடி கஞ்சா வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதேபோல், காரமடை பில்லுக்கடை முக்கு சிறுமுகை சாலை பகுதிகளில் தடைசெய்யபட்ட லாட்டரி சீட்டுக்களை விற்று வந்த மகேஷ்குமார் என்பவரையும் காரமடை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து கேரள லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.