நீலகிரி: உதகை அடுத்த காந்தள் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது வீட்டு தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் தினேஷ் என்ற 9 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதகை அடுத்த காந்தள் புதுநகர் பகுதியில் மூன்று சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த வீட்டின் தடுப்புச் சுவர் மீது சிறுவர்கள் ஏறி விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தடுப்புச் சுவர் இடிந்துள்ளது. இதில் 9 வயது தினேஷ் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இரண்டு சிறுவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த உதகை புறநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர் பலியான சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.