கோவையில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம்; மேலும் 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை

கோவை: கோவை துடியலூர் பன்னிமடை பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஒருவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், குற்றத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை பிடிக்க ஐந்து நபர்களின் டி.என்.ஏ ,.வை பரிசோதனை செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.


கோவை: கோவை துடியலூர் பன்னிமடை பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே ஒருவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், குற்றத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை பிடிக்க ஐந்து நபர்களின் டி.என்.ஏ ,.வை பரிசோதனை செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

கோவை பன்னிமடை பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய நிலையில், சந்தோஷ்குமார் என்பவரை போலீஸார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவின் பேரில், இந்த வழக்கு விசாரணை கடந்த ஜூன் மாதம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையாக தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, 26 சாட்சிகளை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி 8 எதிர்தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களும் எதிராக வாதங்கள் முன்வைக்கப்பட்டு வழக்கு விசாரணை முடிந்தது.

இந்த நிலையில், நீதிமன்றம் சந்தோஷ்குமாருக்கு கொலை குற்றத்திற்காக தூக்குத் தண்டனையும், போக்சோ சட்டம் (5&7)க்கு இயற்கையான மரணம் அடையும் வரைக்கும் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனையும், இந்திய தண்டனைச் சட்டம் 201க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்தது.

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியின் கருப்பையிலிருந்து சேகரிக்கப்பட்ட திரவத்தில் கலப்பு டிஎன்ஏ சுயவிபரம் காணப்படுவதாக ரசாயன பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் மாவட்ட எஸ்.பி சுஜித் குமார், ஏடிஎஸ்பி அனிதா, டிஎஸ்பி மணி ஆகியோரின் மேற்பார்வையில் கோவை மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அனந்தநாயகி துடியலூர் சிறுமியின் வழக்கு தொடர்பாக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இதில் அனந்த நாயகி தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில் மற்றொரு குற்றவாளியை கண்டுபிடிக்க சிறுமியின் உறவினர்கள், சந்தோஷ்குமாரின் நண்பர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, சம்பவ நேரத்தில் அந்தப் பகுதியில் யாரெல்லாம் இருந்தார்கள் என்பது தொடர்பான விசாரணையையடுத்து டி.என்.ஏ சோதனை மூலமாகத்தான் அந்த நபர் யாரென்று கண்டுபிடிக்க முடியும் என அறிந்து முதல்கட்டமாக, ஐந்து பேரிடம் டி.என்.ஏ சோதனை செய்ய முடிவெடுத்து தீவிரம் காட்டி வருகின்றனர்.

மேலும் இவர்களிடம் நடத்தப்படும் டிஎன்ஏ பரிசோதனைகளின் முடிவில் தான் குற்றவாளி யார் ?என உறுதிப்படுத்த முடியும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...