கோவையில் 'சதுரங்க வேட்டை' பட பாணியில் இரிடியம் வைத்துள்ளதாக கூறி பணம் பறித்து ஏமாற்ற இருந்த மூன்று பேர் கைது

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 'சதுரங்க வேட்டை' பட பாணியில் காரில் இரிடியம் வைத்துள்ளதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறித்து ஏமாற்ற இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 'சதுரங்க வேட்டை' பட பாணியில் காரில் இரிடியம் வைத்துள்ளதாக ஆசை வார்த்தை கூறி பணம் பறித்து ஏமாற்ற இருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவரை நண்பர்கள் மூலம் தொடர்பு கொண்ட மூன்று பேர் தங்களிடம் விலையுயர்ந்த இரிடியம் இருப்பதாகவும், இதை வைத்திருந்தால் உங்களுக்கு யோகம் பெருகும், நோய் நொடிகள் நீங்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். 

இதை நம்பிய சாமிநாதன் இரிடியம் வாங்க சம்மதித்துள்ளார். இதையடுத்து அவர்கள் இரிடியத்தின் விலை ரூ.25 லட்சம் என்று கூறியுள்ளனர். ரூ.5 லட்சத்தை முன்பணமாக தந்த சாமிநாதன் மீதிப்பணத்தை ஒரு வாரத்தில் தருவதாக கூறியுள்ளார். 

இந்நிலையில் நேற்று இரிடியம் வாங்குவதற்காக சாமிநாதனை கோவைக்கு அழைத்துள்ளனர். கோவை வந்த சாமிநாதனிடம் காருக்குள் இரிடியம் இருப்பதாகவும், மீதிப்பணத்தை கொடுத்து பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த சாமிநாதன் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...