கோவை: மத்திய அரசு 2020 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.

இந்த நிதிநிலை அறிக்கை கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக தயார் செய்யபட்டு உள்ளதாகவும் விலைவாசி உயர்வு, வேலையிண்மை பிரச்சனை, பொருளாதார மந்தத்திற்கு தீர்வை சொல்லாத நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் குற்றம் சாட்டியுள்ளார்.
எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார் மயப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டதிற்கு சிஐடியு அழைப்பு விடுத்து இருந்தது.

இதன் ஒருபகுதியாக கோவை சிவானந்தகாலணி பவர் ஹவுஸ் அருகில் சிஐடியு கோவை மாவட்டக் குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வேலுசாமி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
பின்னர், ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.