திருப்பூர்: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் வாட்டர் பாட்டில்கள், குளிர்பானம் மற்றும் மருந்து பாட்டில்களில் இருந்து நூல் தயாரிக்கப்பட்டு, அதில் இருந்து ஆடை தயாரித்து அனுப்பி உள்ளனர். மறுசுழற்சி அடிப்படையில் தூக்கி எறியப்படும் வாட்டர் பாட்டில்களில் இருந்து பாலீயெஸ்டர் நூல் தயாரித்து, அதில் இருந்து ஆடை உற்பத்தி செய்து ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஓபன் டென்னிஸ் போட்டிக்கு அனுப்பி உள்ளது திருப்பூரை சேர்ந்த பின்னலாடை நிறுவனம்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் விளையாடும் போது அவர்களின் பின்பக்கம் நின்று தவறவிடும் பந்தையும், மைதான எல்லையை விட்டு வெளியே செல்லும் பந்தையும் எடுத்து தருபவர்களை பால் கிட்ஸ் என்றழைப்பார்கள்.

இவர்கள் மைதானத்தின் எல்லா திசைகளிலும் நின்றுகொண்டிருப்பார்கள். இவர்கள் மற்றும் இவர்களுக்கு பயிற்சி தருபவர்கள், இவர்களது அலுவலர்கள் என அனைவருக்கும் திருப்பூரில் இருந்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் சீருடை தயாரிக்கப்பட்டு, அனுப்பி வைத்துள்ளது திருப்பூர் பின்னலாடை நிறுவனம்.
திருப்பூர் முதலிபாளையம் சிட்கோவில் இயங்கி வரும் என்.சி. ஜான் அன் சன்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் சத்யா கூறியபோது:

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்திவரும் டென்னிஸ் ஆஸ்திரேலியா அமைப்பு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் ஆடுகளத்தில் பால் கீட்ஸூகளுக்கான சீருடைகளை கேட்டிருந்தனர். அதன்படி வாட்டர் பாட்டில்களில் இருந்து நூல் எடுத்து மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை தயாரிக்க முடிவு செய்தோம்.

வாட்டர் பாட்டில்களில் இருந்து பாலியெஸ்டர் நூல் எடுக்கும் சான்றிதழ் பெற்ற நிறுவனங்களில் இருந்து, நூல் தயாரித்து அதனை துணியாக மாற்றினோம். இதற்கான 4 லட்சம் வாட்டர் பாட்டில்களில் இருந்து, 25000 டி-சர்ட்டுகள் தயாரித்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பியதாகவும் இது அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேபோல் மற்ற நிறுவனங்களும் மறுசுழற்சி செய்யப்பட்ட ஆடைகளை தயாரிக்க முன்வரும்போது சுகாதார மாசு ஏற்படுவதை தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.