வால்பாறையில் 15ம் ஆண்டு தைப்பூச விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது!

கோவை: வால்பாறையிலுள்ள மிகப்பழமையான ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலின் 15ம் ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.


கோவை: வால்பாறையிலுள்ள மிகப்பழமையான ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலின் 15ம் ஆண்டு தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.



கோவை மாவட்டம் வால்பாறையில் ஸ்ரீ சுப்பிரமணியசாமி கோவிலில் இன்று அதிகாலையில் கணபதி ஹோம பூஜை நடைபெற்றதை தொடர்ந்து ஸ்ரீ சுப்பிரமணியசாமிக்கு தீபாரதனை காட்டப்பட்டு கொடியும் உற்சவரும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 



இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, மேளதாள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது.

தினமும் விசேச பூஜைகளும் அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில், வரும் வெள்ளிக்கிழமை 7ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், சனிக்கிழமை 8ம் தேதி பால்காவடி பறவை காவடி ஊர்வலத்துடன் மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. இரவு வள்ளி தெய்வானையுடன் திருமுருகன் திருவீதி உலா நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும் இரவு மகா அபிஷேகமும், தொடர்ந்து வான வேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தைப்பூச விழா குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர். இந்த கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...