திருப்பூரில் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறும் 9ம் வகுப்பு மாணவன்..! ஆய்விற்கு அனுப்புமாறு ஆட்சியரிடம் மனு

திருப்பூர்: திருப்பூரில் 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் அதனை ஆய்வு செய்திட அனுமதி கோரி கடிதம் பெற வந்திருந்தார்.


திருப்பூர்: திருப்பூரில் 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் அதனை ஆய்வு செய்திட அனுமதி கோரி கடிதம் பெற வந்திருந்தார்.

திருப்பூர், செரிப் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் அவரது மனைவி தங்கம். இவர்களது மகன் இசக்கிராஜ். இவர், திருப்பூர் கே.எஸ்.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். 



இவர் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்ததாக மருந்து பாட்டிலுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

இதுகுறித்து சிறுவன் கூறும்போது, கடந்த சில நாட்களாக நான் செய்திகளில் பார்க்கும்பொழுது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுப் பல பொதுமக்கள் உயிரிழப்பதை அறிந்தேன். இதுகுறித்து நான் மிகுந்த வேதனைப்பட்டேன். ஆகையால், இதற்கு மருந்து தயாரிக்க வேண்டும் என நினைத்தேன். அதன்பின்னர், எனது பாட்டியின் உதவியுடன் வேப்பிலை, துளசி, நிலவேம்பு, தூதுவளை, பப்பாளி இலை உள்ளிட்ட மூலிகை இலைகளை அரைத்து சாறு தயார் செய்தேன். இதுகுறித்து எனது பள்ளி முதல்வரிடம் தெரிவித்தேன்.

பின்னர், அவர் எனக்கு விடுமுறை அனுமதி அளித்ததும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தேன். மேலும், இதனுடன் சஞ்சீவ் வேறு மற்றும் வெட்டி வேரைச் சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்த்தால் மூலிகை மருந்து முழுவதுமாக தயாராகிவிடும். பின்னர், இதை அரசு மருத்துவமனையில் கொடுத்து பரிசோதனை செய்து பார்க்கலாம் என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க கொண்டு வந்தேன் என்றார். இதையடுத்து, தனது கண்டுபிடிப்பு குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனுவாக அளித்து சென்றார். மேலும், நாளை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மூலிகை மருந்தை ஒப்படைக்கப் போவதாக தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...