கோவை: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோவையில் மாபெரும் தேசம் காக்கும் ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது.
கோவை: குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கோவையில் மாபெரும் தேசம் காக்கும் ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதலில் இஸ்லாமியர்கள் மட்டுமே நடத்திக் கொண்டிருந்த போராட்டத்தை தற்போது அரசியல் கட்சியினரும் கையில் எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பிப்ரவரி 2ம் தேதியான நேற்று கோவையில் தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி நேற்று உக்கடம் பகுதியில் இருந்து இந்த மாபெரும் பேரணி துவங்கியது.
இந்தப் பேரணியில் பல்வேறு இஸ்லாமிய இயக்கங்கள், ஜமாத்தினர், பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பேரணியில் "இந்தியா எங்கள் தாய்நாடு" என்றும் "சி ஏ ஏ,. என் ஆர் சி" போன்றவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியதுடன் தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி சென்றனர்.
மேலும் இந்த பேரணியில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலர் தன்னிச்சையாக தங்களின் கோரிக்கைகளை முன் வைத்தனர்.

மேலும் இந்த பேரணிக்காக கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.