திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் நீலகிரியில் மாபெரும் கையெழுத்து இயக்கம்

நீலகிரி: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் நகர திமுக ஏற்பாட்டில் மாபெரும் கையெழுத்து இயக்கம் உதகை ஏ.டி.சி திடலில் இன்று, பிப்., 2 ஆம் தேதி நடைபெற்றது.


நீலகிரி: குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் நகர திமுக ஏற்பாட்டில் மாபெரும் கையெழுத்து இயக்கம் உதகை ஏ.டி.சி திடலில் இன்று, பிப்., 2 ஆம் தேதி நடைபெற்றது.



குடியுரிமைச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்கூட்டங்கள், பேரணிகள் கையெழுத்து இயக்கம் என தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. 



அதன் தொடர்ச்சியாக, திமுக சார்பில் அதனுடைய தோழமைக் கட்சிகள் இன்று மாபெரும் கையெழுத்து இயக்கப் போராட்டத்தை நடத்தியது.

மேலும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பி இந்தப் போராட்டம் நடைபெற்றது, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் துவக்கப்பட்டது. இன்று துவங்கும் இந்த கையெழுத்து இயக்க போராட்டம் எட்டாம் தேதி வரை நீலகிரி மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளதாக திமுகவினர் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...