கோவை பீளமேடு தீயணைப்பு மீட்புப்‌ பணிகள்‌ நிலையத்தில் டி.ஜி.பி சைலேந்திரபாபு திடீர் ஆய்வு..!

கோவை: கோவை மாவட்டம்‌, பீளமேடு, தீயணைப்பு மீட்புப்‌ பணிகள்‌ நிலையம்‌ திடீர்‌ வருகை புரிந்த தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்‌ பணிகள்‌ துறை இயக்குநர்‌ சி. சைலேந்திரபாபு அவர்கள்‌ பீளமேடு நிலையத்தில்‌ தீவிபத்து மற்றும்‌ மீட்புப்‌ பணிகள்‌ காலங்களில்‌ ஊர்தியினை விரைவாக செலுத்துவது மற்றும்‌ பணிபுரிவது குறித்து பல்வேறு அறிவுரைகள்‌ வழங்கினார்.

கோவை: கோவை மாவட்டம்‌, பீளமேடு, தீயணைப்பு மீட்புப்‌ பணிகள்‌ நிலையம்‌ திடீர்‌ வருகை புரிந்த தமிழ்நாடு தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்‌ பணிகள்‌ துறை இயக்குநர்‌ சி. சைலேந்திரபாபு அவர்கள்‌ பீளமேடு நிலையத்தில்‌ தீவிபத்து மற்றும்‌ மீட்புப்‌ பணிகள்‌ காலங்களில்‌ ஊர்தியினை விரைவாக செலுத்துவது மற்றும்‌ பணிபுரிவது குறித்து பல்வேறு அறிவுரைகள்‌ வழங்கினார்.



மேலும்‌ நிலையத்தில்‌ பெறப்படும்‌ தொழிற்சாலை தீவிபத்து மற்றும்‌ குப்பை தீவிபத்துகளை எதிர்கொள்வது குறித்து அறிவியல்‌ பூர்வமான கருத்துளை வழங்கினார்‌. பீளமேடு நிலையத்தில்‌ உள்ள சிறப்பு உபகரணங்களை இயக்கி பரிசோதித்து அதன்‌ செயல்‌ விளக்கம்‌ மேற்கொண்டு அதன்‌ செயல்திறனை ஆய்வு செய்தார்‌. ஏவலரறை நடத்தப்பட்டு பணியாளர்களின்‌ கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ என உறுதியளித்தார்‌.



இந்த வருகையின்‌ போது தீயணைப்பு மற்றும்‌ மீட்புப் பணிகள்‌ துறை மேற்கு மண்டல இணை இயக்குநர்‌ எஸ்‌. விஜயசேகர்‌, மாவட்ட அலுவலர்‌, உதவி மாவட்ட அலுவலர்‌, நிலைய அலுவலர்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...