கோவை: கோவை மாவட்டம், பீளமேடு, தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம் திடீர் வருகை புரிந்த தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் சி. சைலேந்திரபாபு அவர்கள் பீளமேடு நிலையத்தில் தீவிபத்து மற்றும் மீட்புப் பணிகள் காலங்களில் ஊர்தியினை விரைவாக செலுத்துவது மற்றும் பணிபுரிவது குறித்து பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.

மேலும் நிலையத்தில் பெறப்படும் தொழிற்சாலை தீவிபத்து மற்றும் குப்பை தீவிபத்துகளை எதிர்கொள்வது குறித்து அறிவியல் பூர்வமான கருத்துளை வழங்கினார். பீளமேடு நிலையத்தில் உள்ள சிறப்பு உபகரணங்களை இயக்கி பரிசோதித்து அதன் செயல் விளக்கம் மேற்கொண்டு அதன் செயல்திறனை ஆய்வு செய்தார். ஏவலரறை நடத்தப்பட்டு பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

இந்த வருகையின் போது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மேற்கு மண்டல இணை இயக்குநர் எஸ். விஜயசேகர், மாவட்ட அலுவலர், உதவி மாவட்ட அலுவலர், நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.