கோவை: கேரள மாநிலத்தில் ஊழலை வெளிக்கொண்டு வந்த பழங்குடி பெண் அதிகாரி பணியிட மாற்றம் செய்தததை கண்டித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியைச் சேர்ந்தவர் சாந்தாமணி. பழங்குடி இனத்தைச் சேர்ந்த சாந்தாமணி, கேரள மாநில அரசின் பால்வளத்துறையில் டி.ஓ (Directory officer)-ஆக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அட்டப்பாடியில் உள்ள ஓர் கூட்டுறவு சங்கத்தில் ஏழு கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதை சாந்தாமணி வெளிக்கொண்டு வந்துள்ளார். இதனால், கூட்டுறவு சங்கத்தில் உள்ள அதிகாரிகளும், ஆளும் சி.பி.எம் பிரமுகர்களும், சாந்தாமணிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சாந்தாமணியை ஆலத்தூர் பகுதிக்கு கேரள அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. இதற்கு பழங்குடி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாந்தாமணியை மீண்டும் அட்டப்பாடிக்கே பணியமர்த்த வேண்டும் என போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கேரள அதிமுக, பழங்குடி மக்கள், தாய்குல சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பேரணியாக சென்று பாலக்காடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.