கேரளாவில் கூட்டுறவு சங்க ஊழலை வெளிக்கொண்டு வந்த பழங்குடி பெண் அதிகாரி பணியிட மாற்றத்தை கண்டித்து பாலக்காடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

கோவை: கேரள மாநிலத்தில் ஊழலை வெளிக்கொண்டு வந்த பழங்குடி பெண் அதிகாரி பணியிட மாற்றம் செய்தததை கண்டித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவை: கேரள மாநிலத்தில் ஊழலை வெளிக்கொண்டு வந்த பழங்குடி பெண் அதிகாரி பணியிட மாற்றம் செய்தததை கண்டித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பாலக்காடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியைச் சேர்ந்தவர் சாந்தாமணி. பழங்குடி இனத்தைச் சேர்ந்த சாந்தாமணி, கேரள மாநில அரசின் பால்வளத்துறையில் டி.ஓ (Directory officer)-ஆக பணியாற்றி வருகிறார்.



இந்நிலையில், அட்டப்பாடியில் உள்ள ஓர் கூட்டுறவு சங்கத்தில் ஏழு கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதை சாந்தாமணி வெளிக்கொண்டு வந்துள்ளார். இதனால், கூட்டுறவு சங்கத்தில் உள்ள அதிகாரிகளும், ஆளும் சி.பி.எம் பிரமுகர்களும், சாந்தாமணிக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

மேலும், ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சாந்தாமணியை ஆலத்தூர் பகுதிக்கு கேரள அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. இதற்கு பழங்குடி மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாந்தாமணியை மீண்டும் அட்டப்பாடிக்கே பணியமர்த்த வேண்டும் என போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கேரள அதிமுக, பழங்குடி மக்கள், தாய்குல சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் பேரணியாக சென்று பாலக்காடு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...