திருப்பூர் அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளம் பத்திரிக்கையாளர் உயிரிழப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் அவரது தாயார் கோவை அன்னூர் அருகே சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மற்றும் அவரது தாயார் கோவை அன்னூர் அருகே சாலை விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் திருப்பூர் மாவட்ட செய்தியாளராக பணிபுரிந்து வந்தவர் ஆர்.கே ராஜசேகரன்(31). இவர் இன்று தனது தாய், அக்கா மற்றும் அக்கா குழந்தையுடன் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது, இன்று மதியம் எதிரே வந்த அரசுப் பேருந்து திடீரென ராஜசேகரன் வந்த காரின் மீது மோதியது. இதில் காரில் பயணித்த ராஜசேகரின் தாயார் ஜமுனாராணி(55) சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அருகே இருந்தவர்கள் ராஜசேகரன், அவரது தங்கை மற்றும் தங்கையின் குழந்தை ஆகியோரை கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.



பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ராஜசேகரன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மீதமுள்ள இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பத்திரிகையாளர் மற்றும் அவரது தாயார் விபத்தில் சிக்கி பலியான பலியான சம்பவம் பத்திரிகையாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...