கோவை: வங்கி ஊழியர் போராட்டம் காரணமாக கோவை மாவட்டத்தில் 350 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்படும் என தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க பொதுசெயலாளர் அருணாச்சலம் தெரிவித்தார்.

கோவை வெரைட்டி சாலையில் உள்ள வங்கி ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் கூட்டமைப்பின் தமிழ்நாடு பொது செயலாளர் அருணாச்சலம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பன்னிரெண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தம் வரும் ஜனவரி 31 மற்றும் 1ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
ஊதிய உயர்வு, புதிய பென்சன் திட்டம் ரத்து, வங்கிகளில் ஒரே மாதிரியான வேலை நேரம், அதிகாரிகளின் வேலை நேரம் வரன்முறை படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் அகில் இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடப்பதாகவும் இந்தியா முழுவதும் பத்து லட்சம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் உள்ள 300 வங்கிகளை சேர்ந்த 4000 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.
வரும் 31ம் தேதி ரயில் நிலையம் அருகில் உள்ள பேங்க் ஆப் பரோடா முன்பும் 1ம் தேதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் இதன் பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க உள்ளதாக கூறிய அவர், இந்த வேலை நிறுத்தம் காரணமாக 350 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம், துனை தலைவர் பாட்ஷா உடன் இருந்தனர்.