வரும் ஜனவரி 31 முதல் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம்; கோவையில் ரூ.350 கோடி வர்த்தக இழப்பு ஏற்படும்!

கோவை: வங்கி ஊழியர் போராட்டம் காரணமாக கோவை மாவட்டத்தில் 350 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்படும் என தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க பொதுசெயலாளர் அருணாச்சலம் தெரிவித்தார்.

கோவை: வங்கி ஊழியர் போராட்டம் காரணமாக கோவை மாவட்டத்தில் 350 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்படும் என தமிழ்நாடு வங்கி ஊழியர் சங்க பொதுசெயலாளர் அருணாச்சலம் தெரிவித்தார்.

கோவை வெரைட்டி சாலையில் உள்ள வங்கி ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் கூட்டமைப்பின் தமிழ்நாடு பொது செயலாளர் அருணாச்சலம் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பன்னிரெண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தம் வரும் ஜனவரி 31 மற்றும் 1ம் தேதி நடைபெற உள்ளது என தெரிவித்தார்.

ஊதிய உய‌ர்வு, புதிய பென்சன் திட்டம் ரத்து, வங்கிகளில் ஒரே மாதிரியான வேலை நேரம், அதிகாரிகளின் வேலை நேரம் வரன்முறை படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் அகில் இந்திய வேலை நிறுத்த போராட்டம் நடப்பதாகவும் இந்தியா முழுவதும் பத்து லட்சம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் உள்ள 300 வங்கிகளை சேர்ந்த 4000 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

வரும் 31ம் தேதி ரயில் நிலையம் அருகில் உள்ள பேங்க் ஆப் பரோடா முன்பும் 1ம் தேதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் இதன் பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க உள்ளதாக கூறிய அவர், இந்த வேலை நிறுத்தம் காரணமாக 350 கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் மீனாட்சி சுந்தரம், துனை தலைவர் பாட்ஷா உடன் இருந்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...