நேர்மையான அதிகாரியை மிரட்டும் உயர் அதிகாரி: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாது நடவடிக்கை - திருப்பூர் ஆட்சியர் உறுதி

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரிகளை பறிமுதல் செய்ததை விடுவிக்கக்கோரி வருவாய் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், ஆய்வாளர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காட்டூர் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரிகளை பறிமுதல் செய்ததை விடுவிக்கக்கோரி வருவாய் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், ஆய்வாளர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காட்டூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் கார்த்திக் இவர் கடந்த 24ஆம் தேதி அப்பகுதி வழியாக அனுமதியின்றி கடத்திச் செல்லப்பட்ட மணல் லாரியை மடக்கி பிடித்தார்.

இந்த தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் ஈஸ்வரி, கார்த்திக்கு போன் செய்து அந்த லாரியை விடுவிக்குமாறு தெரிவித்துள்ளார். மேலும், கலெக்டர் முதல் தாசில்தார் வரை அனைவரையும் அவர்கள் கவனிப்பதாகவும், "கார்த்திக் உங்களுக்கு எவ்வளவு வேண்டும்", என விடாப்பிடியாக கேட்கும் ஆடியோ வெளியாகியுள்ளது. 

மேலும், அவர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மணல் லாரியை பிடிக்கும் அதிகாரமில்லை என தெரிவிக்கிறார்.

அதற்கு கார்த்திக் - அப்படியானால் நீங்கள் வந்து பிடியுங்கள் என சொல்லும்பொழுது நான் பார்த்தால் பிடித்துக் கொள்கிறேன், இப்போது பிடித்துள்ள இந்த லாரியை விடுங்கள் என அந்த வருவாய் ஆய்வாளர் அந்த ஆடியோவில் கூறியுள்ளார். 

நேர்மையான அதிகாரியை உயர் அதிகாரி மிரட்டிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கே. விஜய கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் பேசும்போது இவ்விவகாரத்தில் முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இல்லாது நடவடிக்கை இருக்கும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...