திருப்பூரில் 71வது குடியரசு தின விழா கொண்டாட்டம்; மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி ரூ.93.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கொண்டாடப்பட்ட 71வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியேற்றி 515 பயனாளிகளுக்கு ரூ.93.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று கொண்டாடப்பட்ட 71வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியேற்றி 515 பயனாளிகளுக்கு ரூ.93.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



நாட்டின் 71வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 



திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. சரியாக காலை 8 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், தொடர்ந்து திறந்த ஜீப்பில் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். 



பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும், முதலமைச்சர் பதக்கங்கள் மொத்தம் 55 போலீசாருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து சிறப்பாக பணியாற்றிய அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் 239 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார். இதையடுத்து, 515 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சத்து 47 ஆயிரத்து 162 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். 

இதனை தொடர்ந்து 8 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. 

இந்த விழாவில் எஸ்.பி., திஷா மிட்டல், மாநகர போலீஸ் ஆணையர் சஞ்சய் குமார், மாநகர துணை ஆணையர் பத்ரி நாராயணன், டி.ஆர்ஓ. சுகுமார், முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து துறை அதிகாரிகளும், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவியர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...